ஒவ்வொரு வாக்குகளும் தான் மாற்றத்தை உருவாக்குகிறது , வாக்களிக்காமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான்

Un Voting Treason
Seeman press meet Twitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் , நீலாங்கரையில் தனது வாக்கை செலுத்தி விட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது குண்டு வைப்பது , கொலை செய்வது, வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது, அளவுக்கு அதிகம் ஆக சொத்து சேர்த்து அதை கணக்கில் காட்டாமல் மறைப்பது , வருமான வரி கட்டாமல் இருப்பது, இது மட்டும் தான் குற்றம், இது மட்டும் தான் தேசத் துரோகம் என்று இல்லை. வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு வித துரோகம் தான் குற்றம் தான். ஜனநாயக துரோகம் தான் அதை என் மக்கள் செய்யக்கூடாது.

எல்லாரும் நினைக்கிறார்கள் ஒரு வாக்கில் என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது என்று? அது அப்படி இல்லை. ஒவ்வொரு வாக்குகளும் தான் மாற்றத்தை உருவாக்குகிறது. அதனால் என்னிலிருந்து தான் மாற்றம், உங்களிடமிருந்து தான் மாற்றம், நாம் எல்லோரும் சேர்ந்து தான் மாற்றம். எல்லாரும் வாக்கு செலுத்துதல் அவர்களின் பொறுப்பு மற்றும் கடமை அதை தவறாமல் செய்ய வேண்டும் என்று அன்புடன் நான் கேட்டுக்கொள்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com