ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து உடல் நிலை சீரானாதாக தகவல் வெளியாகியது.

கடந்த வாரம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நேற்று பிற்பகலில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது. ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். அதன் பிறகு 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com