ஜி.கே வாசனுக்கு அவரது வீட்டிலேயே ஓட்டு போடமாட்டார்கள் - ஈ.வி.கே.எஸ் அதிரடி

ஜி.கே வாசனுக்கு அவரது வீட்டிலேயே ஓட்டு போடமாட்டார்கள் - ஈ.வி.கே.எஸ் அதிரடி

சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கக்கூடியவர் அண்ணாமலை; ஜி.கே வாசனுக்கு அவரது வீட்டிலேயே ஓட்டு போட மாட்டார்கள் என்றெல்லாம் அதிரடியாக பேசியிருக்கிறார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். சத்திய மூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், பா.ஜ.க கூட்டணி பற்றி கடுமையாக விமர்சித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உடல்நலக்குறைவோடு இருந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அன்றாட அரசியல் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவுநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், மணிப்பூர் கலவரம் முதல் அண்ணாமலையின் நடைப்பயணம் பற்றி பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்தார்.

மணிப்பூர் கலவரம் நடந்து பல நாட்கள் ஆனபின்னரும் எதுவும் தெரியாதது போல் பிரதமர் மோடி பேசுகிறார். தங்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி நடவடிக்கை எடுக்கிறார்கள். அமலாக்கத்துறை, மோடி அரசின் கைப்பாவையாக இருக்கிறது. இதே நிலை ஒருநாள் மோடிக்கும் வரும். அமலாக்கத்துறை அவர் மீதும் பாயும் என்றவர் தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

அண்ணாமலை செல்வது நடைபயணமல்ல. அது பஸ் பயணம்தான். நடைபயணம் போவதாக சொல்லிக்கொண்டால் ராகுல் காந்தி ஆகிவிட முடியாது. சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கக்கூடியவர் பா.ஜ.கவின் அண்ணாமலை. அவரது கார் பயணத்தால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை

பா.ஜ.கவின் பிரதான கூட்டடணியாக அ.தி.மு.கவும் ஜி.கே வாசன் கட்சியும்தான் உள்ளது. ஜி.கே. வாசனுக்கு அவரது வீட்டில் இருப்பவர்களே ஓட்டு போடமாட்டார்கள் என்றவர், தமிழகத்தில் என்றும் பா.ஜ.கவுக்கு இடமில்லை. பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவே போவதில்லை என்றார்.

சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற சிவாஜி கணேசன் நினைவுநாளில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் பா.ஜ.கவில் சேர்ந்துள்ள சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜி நினைவு மண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com