தன்னுடன் சிறையில் இருந்தவருக்கு 270 கோடி கொடுத்த Ex பிரதமர்.

தன்னுடன் சிறையில் இருந்தவருக்கு 270 கோடி கொடுத்த Ex பிரதமர்.
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

த்தாலியின் முன்னாள் பிரதமரான சில்வியோ ஃபெரலஸ்கோனி தன்னுடன் சிறையில் இருந்தவருக்கு 270 கோரை கோடி சொத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் தன்னுடைய காதலிக்கு 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார்.

சில்வியோ ஃபெரலஸ்கோனி இத்தாலியின் நீண்ட கால பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பைப் பெற்றவர். இவரை அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ட்ரம்புடன் ஒப்பிடலாம். இத்தாலியில் மிகப்பெரிய ஊடகத்தை நடத்தி வந்த இவர், தன்னைத் தானே முன்னிறுத்தி தேர்தலில் நின்று வெல்லவும் செய்தார். அதன்பிறகு பிரதமர் டிரம்பை போலவே பல தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வந்தார். எல்லா இடங்களிலும் தன்னுடைய நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் நோக்கிலேயே நடந்து கொண்டார். 

ஒரு காலத்தில் இவர் தன்னை இயேசுவோடு ஒப்பிட்டுக் கொண்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்டார். தனது இமேஜை எப்பொழுதும் சிறப்பாக பிரதிபலிக்கும் இவர், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதும் பொது இடங்களுக்கு செல்வதை வெகுவாகத் தவிர்த்தார். 

உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில்வியோ ஃபெரலஸ்கோனி, கடந்த மே மாதம்தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், ஜூன் மாதத்தில் இவர் உயிர் பிரிந்தது. 2020 இல் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னரே உடல்நிலை மோசமடைந்தது எனக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே ஜூன் மாதம் உயிரிழந்த இத்தாலி பிரதமரின் உயில் சில நாட்களுக்கு முன்பு அவரது வாரிசுகளுக்கு முன் படித்துக் காட்டப்பட்டது. தற்போது அது பற்றிய முழு தகவல்களும் வெளிவந்துள்ளது. அந்த உயில் படி அவரது காதலியான 33 வயது மார்டா என்பவருக்கு 100 மில்லியன் யூரோ விட்டுச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 906 கோடி ரூபாயாகும். மேலும் அவருக்கு இருக்கும் பல நிறுவனங்களின் அனைத்து அதிகாரத்தையும் தனது இரண்டு மூத்த பிள்ளைகளுக்கு என எழுதி வைத்துள்ளார். 

இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக உயிர் இழப்பதற்கு சில காலத்திற்கு முன்பு மார்டா என்பவரை டேட் செய்து வந்தார். முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இறுதியாக டேட் செய்த காதலிக்கு 100 மில்லியன்  யூரோவை எழுதி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தனது சகோதரனுக்கும் 100 மில்லியன் யூரோக்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். 

அதிலும் குறிப்பாக, தன்னுடன் மாஃபியா குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த 'மார்செல்லோ' என்பவருக்கு 30 மில்லியன் யூரோக்களை எழுதி வைத்துள்ளார். அதன் மதிப்பு 270 கோடி ரூபாய் ஆகும். அவரது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் இருவருக்கும் நிறுவனத்தின் 53% பங்குகளும், 60% பிசினஸ் அல்லாத சொத்துக்களும் செல்கிறது எனவும், இரண்டாவது மனைவிக்கு பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் மீதமுள்ள 40% சொத்துக்களை பிரத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இப்படியாக, இத்தாலியை ஆட்சி செய்து வந்த முன்னாள் பிரதமர் தனது சொத்துக்களை காதலி, சிறையில் உடன் இருந்தவர் என பிரித்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com