#BIG NEWS : வாட்ஸ்அப்-க்கு நீதிமன்றம் எச்சரிக்கை : பிரைவசியோட விளையாடாதீங்க... முடியலன்னா வெளிய போங்க..!

whats app
Whats appsource:ndtv
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

வாட்ஸ்அப் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு வாட்ஸ்அப் முக்கியத்துவம் பெற்றுள்ளது.அடுத்தவர்களுடன் உரையாடுவதை விட வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது அதிகரித்துள்ளது.கோடிக்கணக்கான மக்கள் whatsapp-ல் தகவல்களை பகிர்கின்றனர். மெசேஜ் செயலில் ஆதிக்கம் செலுத்தும் whatsapp 2021-ல் அதனுடைய சேவையை தொடர்ந்து பயன்படுத்த புதிய பிரைவசி பாலிசியை ஒப்புக்கொள்ள வேண்டும் என whatsapp இன் தாய் நிறுவனமான மெட்டா தனது யூசர்களை வற்புறுத்தியது.

வாட்ஸ்அப் டேட்டாவை வைத்து தனது மற்ற தளங்களை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு விளம்பரம் காட்ட முடியும் என்பது தான் இந்நிறுவனத்தின் புதிய பாலிசி . Whatsappக்கு மாற்றாக வேறு தளங்கள் இல்லாததால் இந்த புதிய பாலிசியை இந்தியர்கள் வேறு வழியில்லாமல் ஏற்கும் நிலை இருந்தது.இந்தியப் போட்டி ஆணையம் (CCI) இந்த விவகாரத்தில் வாட்ஸ் அப்பிற்கு ₹213 கோடி அபராதத்தோடு டேட்டா பகிரவும் தடை விதித்தது.

தீர்ப்பாயத்தில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில் அபராத தொகை உறுதி செய்யப்பட்ட போதிலும் டேட்டாவை பகிரலாம் என அனுமதி அளித்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று பிப்ரவரி 3 விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ,"வியாபாரம் செய்ய கடுமையான சுரண்டல் நடப்பதாக சாடினார்." இதனை அடுத்து, இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா ,இந்தியர்களின் பிரைவசியுடன் விளையாட அனுமதி இல்லை. எங்களது ஒரு டேட்டாவையும் நீங்கள் விளம்பர நிறுவனங்களுடன் பகிரக்கூடாது.

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்களால் நடக்க முடியவில்லை என்றால் உடனடியாக வெளியேறி விடுங்கள் என whatsapp மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவின் செயல்பாடுகளை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

சில சமயம் உங்களுடைய கொள்கைகளை எங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத போது கிராமப்புற ஏழை மக்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஒருபோதும் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர அனுமதிக்க மாட்டோம் . தனிப்பட்ட மனிதர்களின் தகவல்களை திருடுவதற்கான வழி இது என்பதால் இதனை அனுமதிக்க மாட்டோம் என நீதிமன்றம் எச்சரித்தது.

logo
Kalki Online
kalkionline.com