விஜய்க்கு 3வது இடத்தை கொடுத்த கருத்து கணிப்புகள் முற்றிலுமாக பொய்த்தது ஏன்?

Exit poll
vijay and Survey AI
Updated on

இந்தியாவில் செய்தி சேனல்கள் பிரபலமான பின்னர் தேர்தல்களை கருத்துக்கணிப்புகளை வெளியிடும் செயல்கள் அதிகரித்துள்ளன. ஆரம்ப கால கட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் சரியான கணிப்புகளை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால், சமீபகால கருத்துக்கணிப்புகள் ஓரளவுக்கு முடிவுகளுடன் பொருந்தி வருகின்றன.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த பின்னர் , வெளிவந்த பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேகளில் வந்த முடிவுகளும் , தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்து வெளிவரும் முடிவுகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. மாநிலங்களில் நடத்தப்பட்ட எக்ஸிட் போல் சர்வேக்களில் உள்ளது போலவே , அசாம் , மே.வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்திலும் எக்ஸிட் போல் சர்வேயில் சொன்னது போலவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் திமுகவிற்கும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுகவிற்கும் ஆதரவாகவே வெளிவந்தன. ஆனால், இந்த இரண்டு கட்சிகளும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்துள்ளன. அதேநேரம் ஆக்சிஸ் இந்தியா கருத்துக் கணிப்பு தவிர அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்த்து போனது.

கருத்துக்கணிப்புகள் எதனால் தோல்வியுறுகின்றன?

கருத்துக்கணிப்புகள் என்பது பொதுவாக ஒரு ஊரில் உள்ள 100 பேரிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவதை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியாது. ஒரு தொகுதியில் ஏராளமான வாக்கு சாவடிகள் இருக்கும் பொழுது , கருத்துக்கணிப்புகள் செய்பவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்று இரண்டு வாக்கு சாவடிகளுக்கு மட்டுமே சென்று சர்வே நடத்துகின்றனர். அதிலும் ஒரு வாக்கு சாவடிக்கு 50 முதல் 100 பேரிடம் மட்டுமே இந்த சர்வேக்கள் நடத்தப்படுகின்றன.

ஒரு வாக்கு சாவடியில் 2000 வாக்காளர்கள் இருக்கும் பட்சத்தில் , அதில் 5% மக்களின் கருத்துக்களை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும்வர முடியாது. ஒரு தொகுதி என்று வருகையில் அங்கு வேறு வேறு பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று 10% வாக்களித்த மக்களிடம் இந்த கருத்துக்கணிப்புகளை நடத்தி இருக்க வேண்டும். காரணம் தேர்தலில் விழும் ஓட்டுக்கள் ஒவ்வொரு தெருவிற்கும் மாறுபடும். நகரங்களில் சாலையில் கண்ணில் தென்படும் மக்களிடம் மட்டும் கருத்து கேட்பது சரியானது அல்ல , உள்புற மக்களிடமும் கருத்துக்களை அறிவது அவசியம்.

கருத்துக்கணிப்புகள் நகரங்களை தாண்டி கிராமங்களுக்கும் சென்று நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தான் ஒரு துல்லியமான கணிப்பினை எடுக்க முடியும். பொதுவாகவே சர்வே எடுப்பவர்கள் மக்களின் பொது மக்கள் மத்தியில் எந்த தலைவருக்கு செல்வாக்கு இருக்கிறதோ? அந்தக் கட்சி வெற்றி பெறும் என நோக்கிலேயே கணிப்புகளை எடுக்கின்றனர். இது போன்ற கணிப்புகள் அசாம், மேற்கு வங்கம் , புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் எதிரொலித்தது.

தமிழகத்தை பொறுத்தவரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தையும் , அவருக்குப் பின்னால் இருந்த செல்வாக்கையும், பெரும்பாலான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் சரியான வகையில் எடை போட வில்லை. செல்வாக்குமிக்க நபர்கள் போன்று போலியான பிம்பங்கள் இங்கு கட்டமைக்கப்பட்டிருந்ததால் உண்மை நிலவரங்களை பலரும் அறிய முடியவில்லை.

இதைவிட மிக முக்கியமாக, கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் ஏதேனும் ஒரு கட்சியின் சார்பு நிறுவனமாகவே இருந்ததால், அவர்களுக்கு சாதகமாகவே கணிப்புகளை வெளியிட்டது. இது போன்ற காரணங்களினால் கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் பொய்த்து போனது.

logo
Kalki Online
kalkionline.com