கோவை - தன்பாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

 ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வரை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஜனவரி மாதம் இயக்கப்பட்டது. தற்போது, இந்த ரயிலானது மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகவும், பயணிகளின் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரயிலின் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 ரயில் எண் 03357 கொண்ட தன்பாத் டூ கோவை வாராந்திர சிறப்பு ரயில் நாளை மறுதினம் (பிப்ரவரி 5) முதல் மார்ச் மாதம் 26ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். தன்பாத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பொக்கோரோ ஸ்டீல் சிட்டி, மூரி, ரஞ்சி, ஹட்டியா, சாம்பல்பூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும்.

 பின்னர் இங்கிருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் ரயில் எண் 03358 கொண்ட கோவை டூ தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் வரும் எட்டாம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மட்டும் இயங்கும்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 12.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர் வழியாக வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்றடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com