கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி-மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான, 'கியூட்' நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்கு 'ஆன்லைன்' வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்ப விநியோகம் பிப்ரவரி முதல் தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து மே இரண்டாவது வாரத்தில், தேர்வு அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிக்கப்பட்டு, ஆக., 1 முதல் வகுப்புகள் துவங்கும்.
இந்தாண்டு நுழைவுத் தேர்வை, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உட்பட மொழிகளில் எழுதலாம். தேர்வு எழுத விரும்புவோர், https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.