2024 மக்களவைத் தேர்தல்: பெண் வாக்காளர்களை கவர பா.ஜ.க. புதிய வியூகம்!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்
குஜராத் சட்டப்பேரவை தேர்தல்

ரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஒரு புதிய உத்திகள் மூலம் புதிய  வியூகத்தை உருவாக்கி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய திருச்சூர் பயணம் அதன் மையப்புள்ளியாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் பெண்கள் என்பதை குறிக்கும் வகையில் மகிளா சங்கமம் என்னும் பேரணி நடைபெற்றது. இது மக்களுடன் நேரடி தொடர்பை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல். பெண் வாக்காளர்கள் ஆதரவை பா.ஜ.க. பெறுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சிறப்பு கூட்டத்தின் மூலம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. பெண் வாக்களார்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கிடைத்த தேர்தல் வெற்றி பா.ஜ.க.வுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

எனினும் சவாலான நேரத்தில் தேர்தலில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பா.ஜ.க. தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.பாரம்பரியமாக இந்துத்துவ தேசியவாதத்துடன் தொடர்புடைய பா.ஜ.க. தனது ஒரே மாதிரியான அணுகுமுறையை கைவிட்டு பெண் வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. வாக்களிப்பதில் மட்டுமல்ல, தேர்தல் தொடர்பான நிகழ்வுகள், பேரணிகள் ஆகியவற்றிலும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றன. இது பா.ஜ.கவுக்கு புதிய தெம்பை அளித்துள்ளது.

பெண்கள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள்: பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தப்படும் மகளிர் நலத் திட்டங்களே பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். உஜ்வாலா சமையல் எரிவாயு சலுகை திட்டம் மூலம் பெண்கள் பயனுடைந்துள்ளனர். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கச் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் பாலின நீதிக்கான உறுதிமொழியாகும். மேலும் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் பா.ஜ.க.வின் சமநீதிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இவை 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியமாக பிரசாரம் செய்யப்படும்.

உஜ்வால் யோசனா, ஜன்தன் வங்கிக் கணக்கு, சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்கள், மகளிர் தொழில்முனைவோருக்கு முத்ரா கடனுதவி திட்டம் உள்ளிட்டவை நாடு முழுவதும் பெண்களின் வாழ்க்கை நிலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. சமையலறையில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது முதல் பெண்களுக்கு வீடு வழங்கும் திட்டம் வரை பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

ஸ்வாச் பாரத் மிஷன், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா, ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்கள் பெண்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் சுகாதாரத்துடன் வாழ வழி செய்கிறது. இது பெண் வாக்களர்களிடையே எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் வாக்களிக்கும் சக்தி அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.  இது தேர்தலில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதை குறிக்கிறது.

பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி, ஊரக பகுதி பெண்கள் மேம்பாட்டுக்கான சமூக திட்டங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான நிதியுதவி திட்டம் என பல்வேறு மகளிர் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களை எளிதில் கவர முடியும் என்றும் வெற்றிவாகை சூட முடியும் என்றும் பா.ஜ.க. கருதுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com