#BIG BREAKING : குவைத்தில் பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமானம்!

US F-15 Crashes in Kuwait
US F-15 Crashes in KuwaitSource:NDTV
Updated on

அமெரிக்கா இஸ்ரேல் போர் தொடர்ச்சியாக அமெரிக்கா டெக்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. நோயாளிகள் வேறு இடத்திற்கும் மாற்றப்பட்டதால் உயிர் சேதம் இல்லை எனத் தெரிகிறது.ஈரானின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஈரான் உயர்ததலைவராக இருந்த காமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டது ,ஈரான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது முக்கிய தளபதிகள் ஆறு பேரோடு காமினி அவசர ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததாகவும் உளவாளிகள் மூலம் தகவல் அறிந்து காமேனி ஆலோசனை மேற்கொண்டிருந்த கட்டிடத்தின் மீது குறி வைத்து ஒரே சமயத்தில் வீசப்பட்ட ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

தொடர்ந்து ஈரான் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான். தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிப்புடன் குவைத்தில் அமெரிக்க போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் எப்15(f- 15)ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியானது .குவைத்தில் பறந்த அமெரிக்க போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதன் காரணம் என்ன என்றும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து குவைத் மீது ஈரான் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது என்றும் தூதரகம் கட்டடம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஈரானின் ஏவுகணைகளை குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் ஆறு அரபு நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானில் தூதரகத்தை மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஈரான் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் வளைகுடா நாடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானில் ஆட்சி மாற்றம் அவசியம். அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த தீவிரவாத ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஈரான் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com