ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பம்!

ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பம்!

ரிமைக் கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர் திருச்சி சேர்ந்த ஒரு குடும்பத்தினர். அதிநவீன கண்டுபிடிப்புகள் அதிகரித்து வரும் காலகட்டத்திலும் பெண்கள் சுடுகாட்டுக்குச் செல்லக்கூடாது என்று பிற்போக்கு பேசும் அதே நேரத்தில் விஜயகுமார் தனது மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனாவுடன் சுடுகாட்டுக்குச் சென்று ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து வருகிறார்.

இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், நானும் எனது மனைவி, மகளும் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும்.

வாழும் காலத்தில் தான் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று பார்த்தால் வாழ்க்கையின் இறுதிப் பயணத்தில் கூட நிம்மதி கிடைக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கின்றனர். இவர்களின் வலிகளையும், வேதனைகளையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

இந்த நிலையில் தான் எனது குடும்பம் ஒரு முடிவு எடுத்தது இதைத் தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுப் பொருள்களை சேகரித்து ஆதரவற்ற மக்களுக்கு வழங்க தொடங்கினோம். அப்போது சாலையில் ஆதரவற்றிருக்கும் மக்கள், இறந்த பிறகும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதை பார்த்து நாங்களே அடக்கம் செய்ய முடிவெடுத்தும்.

இவ்வாறு எனது மனைவி மகளுடன் இணைந்து ஆதரவற்ற சடலங்களை அச்சமின்றி அடக்கம் செய்து வருகிறோம். மேலும் எனது மகள் வழக்கறிஞருக்கு படித்து வரும் நிலையில் கூட அவரே முன்வந்து ஆர்வமாக எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com