

2026 சட்டமன்றத் தேர்தலில், எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? என்ற விவாதங்கள் ஏற்கனவே டீக்கடைகளில் தொடங்கி, சமூக வலைதளங்களிலும் வீடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் பொது இடங்களில் உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கும்போது, தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் ? என்ற பேச்சு தான் பரவலாக பேசப்படுகிறது. அதிலும் முக்கியமாக புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யின் , அரசியல் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று பிரசாந்த் கினி என்கின்ற புகழ்பெற்ற இந்திய ஜோதிடர், தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு தேசிய அளவில் உடனடியாக கவனம் பெற்றதோடு பல்வேறு விவாதங்களையும் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த கணிப்பில் நடிகர் விஜய்யின் எதிர்காலம் மற்றும் தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் கட்சி பற்றியும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் கினியின் கணிப்புகளில் பல இதற்கு முன்னர் பலித்துள்ளன. குறிப்பாக நடிகை சமந்தாவின் முதல் திருமணம் , அதன் பிறகு விவாகரத்து, அடுத்த திருமணம் ஆகியவற்றையும் முன்பே துல்லியமாக இவர் கணித்திருந்தார். இது மட்டுமல்லாமல் வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புகள் பற்றியும் துல்லியமாக கணித்திருந்தார். இதனால் , பிரசாந்த் கிணியின் ஜோதிடத்தின் மேலே பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஜோதிடர் பிரசாந்த் கினி முன்பு தமிழ்நாட்டு தேர்தல் பற்றி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சில கணிப்புகளை கூறியிருந்தார். அதன் படி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஆளும் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் கணித்துள்ளார். நடிகர் விஜய் இந்த தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார். தவெக கட்சி ஒற்றை இலக்கத்திலேயே வெற்றி பெறும் , விஜய் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று அவரது கணிப்புகள் இருந்தன. இதைப் பார்த்து கோபமடைந்த விஜய் ரசிகர்கள் அவரது கணிப்புகள் பொய் ஆகும் என்று சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் ஜனவரி 1 ,2026 ஆண்டு தனது புதிய கணிப்புகளை பிரசாந்த் வெளியிட்டார். இந்த கணிப்பின் படி 2030 ஆண்டு , விஜயின் அரசியல் வெற்றி தொடங்கும் , மேலும் ஜனநாயகன் திரைப்படம் விஜயின் இறுதி திரைப்படமாக இருக்காது என்றும் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டு விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறுகிறார். 2029 ஆம் ஆண்டு தான் விஜயின் இறுதி திரைப்படம் வெளியாகும் . அதன் பின்னர் 2031 ஆம் ஆண்டு விஜய் முதல்வர் பதவி ஏற்பார் என்று பிரசாந்த் கினி ஆருடம் கூறியுள்ளார்.
பிரசாந்த் கினியின் சமீபத்திய கூற்றின்படி ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கி தற்போது உச்சம் பெற்றுள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகள் வங்கதேசத்தில் தொடர்ச்சியாக வன்முறை நிகழும் , இந்தியா சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் நிகழும் , 2026 செப்டம்பர் மாதம் டோக்லாம் பகுதியில் மீண்டும் சீனா வாலாட்டும் என்றும் பல கணிப்புகள் தெரிவித்துள்ளார்.
துல்லிய கணிப்புகளுக்கு பெயர் பெற்ற பிரசாந்த் கினி தன் கணிப்புகள் பலவும் தோல்வியுற்றதையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். தமிழக தேர்தலில் அவர் கணிப்புகள் பலிக்குமா? என்பதை தேர்தல் முடிவில் அறிந்துக் கொள்ளலாம்.