சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமானவர் நேபாளத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்ற சந்தீப் லமிச்சனே, கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியிருந்தார்.
இந்நிலையில் சந்தீப் மீது 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு காரணமாக சந்தீப் லமிச்சனே கைது செய்யப்பட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் லமிச்சனே மீது அந்த பெண் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறிருப்பதாவது:
கிரிக்கெட் வீரர் சந்தீப்பின் அறிமுகம் என் நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி காத்மண்டு ஓட்டலில் சந்தீப் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
-இவ்வாறு அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கில் காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் சந்தீப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேபாள கிரிக்கெட் வாரியம், விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சந்தீப் நேற்று (அக்டோபர் 6 ) கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பிய போது காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.