பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார்!
பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி, மே 4 ஆம் தேதி தனது 77 வயதில் சென்னையில் காலமானார்.
இவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான்கள் பலருடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 1989ஆம் ஆண்டில் 'சுருதி லய கேந்திரா' எனும் இசைப் பள்ளியை சென்னை, ரங்கராஜபுரத்தில் துவக்கினார். இப்பள்ளியின் கிளைகள் தற்போது ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் உள்ளன.
வாத்திய இசை ஆர்வம் கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ இப்பள்ளிகளின் மூலம் மிருதங்க இசையைக் கற்று வருகின்றனர் எனக் கேள்வி.
இது தவிர கிழக்குக் கடற்கரைச் சாலையில், பனையூர் எனுமிடத்தில் கடற்கரையையொட்டி'Seasun Gurukulam' எனும் பெயரில் இசைப் பயிற்றுவிப்பு மையம் ஒன்றினையும் அவர் அமைத்துள்ளார். இந்த மையத்தில் வகுப்பறை, பொதுவான சமையலறை மற்றும் இசை நூலகமும் உண்டு என்கிறார்கள்.
டி. கே. பட்டம்மாள், செம்மங்குடி சீனிவாச ஐயர், லால்குடி ஜெயராமன், எம்.பாலமுரளிகிருஷ்ணா, மதுரை எஸ். சோமசுந்தரம், செம்பை வைத்தியநாத பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், எம். டி. இராமநாதன், எம். எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்ட பல புகழ் வாய்ந்த கர்நாடக இசை மேதைகளுக்கு இவர் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்.
எட்டு வயதில் மிருதங்கம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய மணி, தமது 18 வயதில் மிகக்குறுகிய காலத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனிடம் பெற்றார். 1999 ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கப்பட்டது.