ஏழு முறை கிராமி விருது வென்ற, பிரபல பாப் பாடகி மடோனா வயது 64, அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். பாடகி மடோனாவுக்கு தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக ICU- வில் அனுமதிக்க பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
மடோனாவின் (Everybody) முதல் தனிப்பாடல் 1982 ஆம் ஆணடு வெளியானது. அதனைத்தொடர்ந்து லக்கி ஸ்டார்”, “பார்டர் லைன்” “ஹாலிடே” உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 1984 ஆம் ஆண்டு வெளியான “லைக் எ விர்ஜின்” மடோனாவை சர்வதேச அரங்கில் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத் தக்கது.
செரிஷ் என்ற படத்தில் நடித்த போது மடோனாவுக்கு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது மேலாளர் கை ஓசிரி கூறியதாவது,
“கடந்த 25ஆம் தேதி மடோனாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் தங்க வழி வகுத்துள்ளது. தற்போது மடோனாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. கனடா வான்கோவரில் (Vancouver) ஜூலை 15 ஆம் தேதி தொடங்க இருந்த அவரின் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப் படுகிறது. சுற்றுப் பயணம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் ” என அவர் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில், “மேடம் எக்ஸ்” சுற்றுப் பயணத்தின் போது மடோனாவுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.