இந்த டிரஸ் நம்ம ஊரில் இருந்தால் நல்லா இருக்குமே!

இந்த டிரஸ் நம்ம ஊரில் இருந்தால் நல்லா இருக்குமே!

ம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. நாம் உண்ணும் வித்தியாசமான உணவுகளில் இருந்து, நாம் பயன்படுத்தும் சாதனங்கள் வரை எல்லாமே ஏதோ ஒரு தேவையினால் உருவாக்கப்பட்டதுதான். 

அப்படி மனிதர்கள் பயன்படுத்தும் பல புதிய கண்டுபிடிப்புகளை நாம் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறோம். அந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்போதே எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடாக ஜப்பான் திகழ்கிறது. இத்தகைய நாட்டின் மற்றொரு புதிய கண்டுபிடிப்பு உலக மக்களை ஈர்த்துள்ளது. 

சமீப காலமாக ஜப்பானில் வெயில் அதிகமாக கொளுத்தி வருவதால், அதை எதிர்த்துப் போராடும் வகையில் தன் ஆடையில் புதிய அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறார் ஒரு நபர். ஒரு சக்தி வாய்ந்த பேட்டரி மற்றும் கூலிங் ஃபேனைப் பயன்படுத்தி தனது ஆடைக்குள் வியர்க்காமல் இருப்பதற்கு ஒருவர் முயற்சி செய்திருக்கிறார். 

இதுசார்ந்த காணொளி ட்விட்டரில் வெளியாகி இணையத்தை அதகளம் செய்து வருகிறது. இவர் உருவாக்கிய உடையில் பொருத்தப்பட்டுள்ள ஃபேன், வெளிப்புற காற்றை இழுத்து ஆடைக்குள் உருவாகும் வெப்பத்தையும், வியர்வையும் ஆவி ஆக்குகிறது. சட்டையிலேயே பொருத்தப்பட்டிருக்கும் ஃபேன் போன்ற வடிவமைப்பில் இந்த உடை இருக்கிறது. இது உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கிறது எனச் சொல்லப்படுகிறது. 

இந்த வித்தியாசமான உடையை ட்விட்டரில் பார்த்த நபர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு நபர், "நான் பல ஆண்டுகளாக கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன், அப்போது இந்த கண்டுபிடிப்பு இல்லாமல் போய்விட்டதே" என கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் "இதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அவர்கள் எப்போதோ எதிர்காலத்தில் வாழ்கிறார்கள் என்று எனக்கு தெரியும்" என கருத்து தெரிவித்திருந்தார். "டிரஸுக்குள் ஏசி வைப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்திலேயே நாங்கள் பார்த்துவிட்டோம்" என மற்றொருவர் கமெண்ட் செய்திருந்தார். 

வெப்பப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் இதுபோன்ற ஆடை எங்கள் ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com