இனிமையான குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தில்லி போலீஸ்

இனிமையான குரலால் ரசிகர்கள்
மனதில் இடம் பிடித்த தில்லி போலீஸ்

தில்லி போலீஸ் அதிகாரிகளும், காவலர்களும் தங்களது சிறப்பான சேவை மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பெயர்பெற்றவர்கள். இப்போது தில்லி போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர், தனது இனிமையான குரல்கள் மூலம் திரைப்பாடல்களைப் பாடி, சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை மகிழ்வித்து வருகிறார்.

தில்லி போலீஸில் பணிபுரிபவர் ரஜத் ரதோர். இவர் சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இனிமையான குரலில் பாடி, அதை இன்ஸ்டாகிராம் மூலம் விடியோவில் வெளியிட்டு ரசிகர்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். அவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அரிஜித்சிங், விஷால் மிஸ்ரா மற்றும் சில பாடர்கள் பாடிய ஹிட்டான பாடல்களை அப்படியே அவர்களைப் போலவே பாடி சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை ஈர்த்து வருகிறார். அவர்களும் இவரின் பாடல்களை விடியோவில் கேட்டு தங்களது கருத்துக்களை தயங்காமல் வெளியிட்டு வருகின்றனர்.

உங்களுடைய குரல் இனிமையாக இருக்கிறது. நீங்கள் அழகாக பாடுகிறீர்கள் என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

உண்மையிலேயே உங்களிடம் திறமை உள்ளது சார்… தேசத்துக்கு சேவை செய்துகொண்டே எங்களையும் மகிழ்விக்கிறீர்கள். உங்களது இனிமையான குரல் என்னை இழுக்கிறது. நன்றாக பாடுவது எப்படி என்று எங்களுக்கு டிப்ஸ் கொடுங்கள் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் குரல் இனிமையாகவும், பிசிறில்லாமல் தெளிவாக உள்ளது. திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் பாடும் பாடல்களை அனைத்தும் எனக்குப் பிடித்த பாடல்களே. உங்களுக்கு எனது பாராட்டுகள் என்று மூன்றாமவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com