மத்திய அரசின் திட்டங்களை நிராகரித்த விவசாய அமைப்பு.. நாளை மீண்டும் தொடங்கும் பேரணி!

farmer protest
farmer protest

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையை நேற்று முழுவதும் விவசாய அமைப்பு கலந்து ஆலோசித்ததில், மத்திய அரசின் பேச்சில் தெளிவில்லை என்று கூறி திட்டங்களை நிராகரித்துவிட்டது. ஆகையால் விவசாயிகள் மீண்டும் நாளை காலை பேரணியைத் தொடங்க முடிவெடுத்துள்ளனர்.

மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாய அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் பஞ்சாப் ஹரியானா எல்லையில் போலீஸாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகள் வயல்வெளிகள், ஆற்றங்கரைகள் போன்றவற்றில் அத்துமீறி எல்லையைத் தாண்டி நுழைந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசப்பட்டது. இதனால் கடந்த பிப்ரவரி 13ம் தேதி 300 விவசாயிகள் காயம் அடைந்தனர். இதற்கு பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு, ஐந்து முப்பது மணியளவிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி நள்ளிரவு தான் முடித்தது.

இதில் பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசின் விவசாய அமைப்பு நேற்று முழுவதும் கலந்து ஆலோசித்தது. இதன்பின்னர் தான் மத்திய அரசின் முடிவுகளை விவசாய அமைப்பு நிரகாரித்துவிட்டதாகத் தெரியவந்தது.

இதுகுறித்து விவசாய அமைப்பின் சங்கத் தலைவர் சர்வான் சிங் கூறுகையில், “மத்திய அரசின் திட்டம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகையால் புதன்கிழமை காலை மீண்டும் அமைதியான முறையில் டெல்லியை நோக்கி எங்களது பேரணியைத் தொடர்வோம்” என்றார்.

மற்றொரு விவசாயத அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் கூறுகையில், “அரசின் திட்டங்களை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் ஒரு தெளிவு இல்லை. பருப்பு, பருத்தி மற்றும் சோளம் ஆகிய விளைப்பொருட்களைப் பற்றி மட்டுமே மத்திய அரசு பேசுகிறது. அப்போது அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மட்டுமே நன்மை அடைவார்கள். மீதமுள்ள விவசாயிகளுக்கு அதே நிலைமைத்தான். எங்களது கோரிக்கை 23 விளைப்பொருட்களை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு வாங்க வேண்டும் என்பதுதான். இவ்விவகாரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காவிட்டால் மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பொங்கி வரும் பருப்பு, அணஞ்சி போகும் அடுப்பு... நச்சுனு 4 கிச்சன் டிப்ஸ்! 
farmer protest

ஆகையால் தான் நாங்கள் அரசின் திட்டங்களை நிராகரிக்கிறோம். பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்தாலே அரசுக்கு ரூ1.50 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் சொன்னார். ஆனால் முன்னாள் வேளாண்மை துறை கமிஷனர் பிரகாஷ் நடத்திய ஆய்வில், அனைத்து விளைப்பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொடுத்தாலே ரூ1.75 லட்சம் கோடிதான் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து பாமாயிலை இந்தியாவிற்கு கொண்டுவர ஆண்டுக்கு ரூ 1.75 லட்சம் கோடி மத்திய அரசு செலவழிக்கிறது. அந்த பணத்தை எண்ணெய் வித்துகளை விளைவிக்க செலவிடலாமே” என்று கூறினார்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com