புதுப்பொலிவு பெற இருக்கும் உழவர் சந்தைகள்!

புதுப்பொலிவு பெற இருக்கும் உழவர் சந்தைகள்!

Published on

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று உழவர் சந்தைத் திட்டம். தொடக்கத்தில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்தத் திட்டம், ஆட்சி மாற்றத்தின் காரணமாக கடந்த சில வருடங்களாகவே பராமாப்பு இல்லாமல்  இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 25 உழவர் சந்தைகளைப் புதுப்பிக்க 8.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி, உழவர் சந்தைகளில் குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறு சீரமைப்பு, கடைகளின் கூரைப் பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்ய இந்த நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு புரனமைப்புப் பணிகள் செய்ய இருப்பதாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் தனது கருத்துருவில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பதிலாக செங்கல்பட்டு உழவர் சந்தை இணைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com