தில்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்கள் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். அனைத்து விவசாயப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

பாரதீய கிஸான் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகவேந்திர படேல் கூறுகையில், 'விவசாயிகள் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமீபத்தில் பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தினோம்.

இப்போது தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தில் குதித்துள்ளோம். குறைந்தபட்ச ஆதாரவிலையை செலவினங்கள் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பிரதான கோரிக்கையாகும்.

மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்து வரும் தொகையை ஆண்டுக்கு ரூ.6,000-மாக உயர்த்த வேண்டும். மரபணு மாற்ற பயிர்களுக்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com