தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் வைரல் வீடியோ!

தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் வைரல் வீடியோ!

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாய நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விவசாய விளைபொருட்கள் விலை அதிகரித்தும் , நிலத்தில் விளைகின்ற பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டமும் ஏற்பட்டு வருகிறது. சமீபமாக முட்டைகோஸ், பீட்ரூட் ,வெங்காயம் மற்றும் நூல்கோல் போன்ற காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் அதற்கு சரியான விலை கிடைக்காமல் ஆற்றிலோ, குளத்திலோ கொட்டிய சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தக்காளி பயிரிடும் விவசாயிகள் தற்போது தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் செயலை செய்து வருவது பலருக்கும் வேதனை அளிக்கிறது.

தக்காளி பயிரிட மூன்று ஏக்கருக்கு உழுவதற்கு 17000 ரூபாயும், நாற்றுக்கு 30,000 ரூபாயும், நாற்று நடுவதற்கு 28,000 ரூபாயும், மருந்து, உரத்திற்கு 60,000 ரூபாயும் செலவு செய்து உள்ளார். தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 5 ரூபாயும் செலவு ஆகிறது என்கிறார்கள் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். உரிய விலை கிடைக்காமல் கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனையாவதால் தக்காளி செடிகளை விவசாயிகள் அழிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும் என்பதாலும், உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே உழவு ஓட்டி அழித்துளார். இதனால் மூன்று ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் விவசாய உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளி செடிகளை விவசாயி அழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com