நெட்டிசன்களின் மனதை வென்ற அப்பா-மகள் உறவு!

நெட்டிசன்களின் மனதை வென்ற அப்பா-மகள் உறவு!
Published on

மகளின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் அம்மாக்களைவிட அப்பாக்கள்தான் என்று சொல்ல வேண்டும். சில சமயங்களில் அம்மாக்களின் கோபத்துக்கு மகள் ஆளாக நேரிட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது அப்பாக்கள்தான்.

அம்மாக்கள் ஏதாவது ஒரு முடிவு எடுத்துவிட்டாலும் அதை மகளுக்கு சாதகமாக மாற்றுவதும் இந்த அப்பாக்களே. இன்னும் சொல்லப்போனால், மகளுக்கு அவள் கேட்காமலேயே ஆதரவாக இருந்துவருபவர்கள் அப்பாக்கள்தான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. அப்படி என்ன அந்த விடியோவில் இருக்கிறது என்கிறீர்களா?

சண்டீகரில் ஒரு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வழக்கம் போல் ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சிறு குழந்தைகள் முதல் மாணவிகள் வரை பலரும் இதில் பங்கேற்றனர்.

கலைநிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற தனது மகளுக்கு பார்வையாளர் வரிசையில் இருந்தவாரே டான்ஸ் மூவ்மென்டை சொல்லித்தருகிறார் இந்த அப்பா.

மேடையில் நடனமாடும்போது தனது மகள் ஸ்டெப்புகளை மறந்துவிட்ட நிலையில் எப்படி ஆட வேண்டும் என்று இங்கிருந்தபடியே சொல்லித் தருகிறார் அப்பா. நடன அசைவுகளை மகள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பார்வையாளர் வரிசையில் இருந்தவாறே ஆடிக்காட்டுகிறார்.

திபான்ஷி காப்ரா என்னும் ஐ.பி.எஸ். அதிகாரி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த விடியோ பல நெட்டிஸன்களின் நெஞ்சத்தை நெகிழவைத்துள்ளது.

அப்பான்னா அப்பாதான்! அப்பா-மகள் உறவு என்றால் இதுதான் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த விடியோ பதிவை 85,000-த்துக்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

வாவ் ... மகளின் மீது அப்பாவுக்கு இவ்வளவு அக்கறையா? என்னால் நம்பவே முடியவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் வெற்றிக்கு குறிப்பாக பெண் குழந்தைகளின் வெற்றிக்கு பின்னணியில் வெளியில் தெரியாத ஹூரோக்களாக இருப்பவர்கள் அப்பாக்களே என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த அப்பா என்ற விருது கொடுக்கலாம் என்று மற்றொருவர் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com