

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்(SIR) தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட , 2026- ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளன.
இதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்னர்'சிறப்புச் சுருக்கத் திருத்த முறைக்கு' (SSR) முறையை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை மேம்படுத்தி வந்தன. ஆனால் , தற்போது முழுமையாகப் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் வகையில் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் 2025-ல் பிகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்த பணிகள் படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மாநில வாரியாக வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . அதன்படி
பிப்ரவரி 14 –ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி.
பிப்ரவரி 17 –தமிழ்நாடு மற்றும் குஜராத்.
பிப்ரவரி 21 –கேரளா, சத்தீஸ்கர், கோவா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள்.
பிப்ரவரி 23 – மத்தியப் பிரதேசம்.
பிப்ரவரி 28 – மேற்கு வங்கம்.
ஏப்ரல் 10 –உத்தரப் பிரதேசம்.
இறுதிப்பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது?
இரண்டு முறைகளில் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
1.EPIC எண்ணை வைத்து தேடுதல்:
உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் , அதில் உள்ள அடையாளம் எண்ணை(EPIC) என்னை பயன்படுத்தி, electoralsearch.eci.gov.in என்ற தளத்தில் நுழைந்து உங்கள் EPIC எண்ணை உள்ளிட்டுச் சரிபார்க்கலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன் மொபைல் எண்ணை இணைந்திருந்தால் OTP மூலம் உங்கள் பெயர் மற்றும் தாய் , தந்தையர் பெயரை பயன்படுத்தி தேடலாம்.
2.வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல்:
முன்பே வாக்காளர் அடையாள(EPIC) எண் இல்லாதவர்கள் voters.eci.gov.in தளத்தில் நுழைந்து "Download Electoral Roll" கிளிக் செய்து , அங்கு உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுத்து '2026 SIR Final Roll' ஐ தேர்வு செய்து , உங்களது வாக்கு சாவடிக்கான முழு பட்டியலையும் PDF வடிவில் பெறலாம். அதில் உங்களது பெயரையும் , உங்களது குடும்பத்தினர் பெயரையும் , அக்கம்பக்கத்தினர் பெயரும் இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம்
உங்களது பெயர் விடுபட்டிருந்தால்:
இறுதிப் பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டிருந்தால் , நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால், உங்களால் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. நீங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்றால் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற வேண்டும்.
1.மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறையீடு:
இறுதி பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டிருந்தால் , பட்டியல் வெளியான 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யலாம் , மாவட்ட ஆட்சியரே மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருக்கிறார்.
2. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் (CEO) மேல்முறையீடு:
நீங்கள் மாவட்ட அளவில் செய்த முறையீட்டிற்கு பலன் கிடைக்காவிட்டால் , அடுத்த 15 நாட்களுக்குள் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். இதற்காக தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.புதிய விண்ணப்பம் (படிவம் 6):
நீங்கள் முறையீடு செய்த முதல் இரண்டு வழிகளிலும் உங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் , நீங்கள் இறுதியாக படிவம் 6 ஐ பயன்படுத்தி புதிய வாக்காளராக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்காக 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் எவரும்
ECINET செயலி அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் , வேட்புமனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.