காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்!

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்!
Published on

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதியும், விளைச்சலை அதிகப்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு அரசு உழவர் நலத்துறை சார்பில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023-யை அமல்படுத்த 75.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 100 மானியத்தில் உரம் வழங்க நடவடிக்கைகள் உள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் வட்டாரங்களான லால்குடி, அந்தநல்லூர், திருவரம்பூர், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு 1.60 கோடி செலவில் உரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் 6500 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 2,466 ரூபாய் என்ற மதிப்பில் 45 கிலோ யூரியா, டிஏபி 25 கிலோ பொட்டாசியம் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. மேலும் காவேரி டெல்டா பகுதிகள் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் திட்டத்தில் பயன்பெறலாம்.

இதன் காரணமாக குறுவை சாகுபடிக்கான செலவுகள் குறைவதோடு லாபம் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com