பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல யோசனைதான் - டிடிவி தினகரன்

பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல   யோசனைதான் - டிடிவி தினகரன்
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் தேர்தல். ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் வசம் ஒப்படைத்துவிட்டனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இது நல்ல யோசனை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றவர்களைப் போல வீம்புக்காகவோ, அகங்காரத்திலோ ஆணவத்திலோ இருக்கிற கட்சி கிடையாது . யதார்தத்தை உணர்ந்தவர்கள். நல்ல ஒரு முயற்சி திமுகவை வீழ்த்த எடுக்கப்பட்டால், நாங்களும் அதைப்பற்றி யோசிப்போம்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை அறிவிப்பது போன்ற ஒரு வாய்ப்பு இருந்தால்.... அதுபோல் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

 அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, திமுகவை எதிர்த்து வீழ்த்த ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது நல்ல ஒரு யோசனைதான். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால், அதுபற்றி பேசலாம். ஆனால் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்.

மக்களிடையே திமுக ஆட்சிக்கு எதிராக பெரியதொரு எதிர்ப்புணர்வு இருக்கிறது. இதை எதிர்கட்சிகள், குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாக தங்களை நினைப்பவர்கள் கடந்தமுறை செய்த தவறை திரும்ப செய்யாமல், மீண்டும் எல்லோரும் ஓர் அணியில் கூட்டணியில் இணைந்து நம்மைப் போலவே திமுகவை எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தி திமுகவை எதிர்த்தால் அந்த அரக்கத்தனமான திமுக கூட்டணியை வீழ்த்த முடியும்" என்று கூறினார்.

இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதற்கு டிடிவி தினகரன் வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com