நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

63 வயதான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் கூறப்பட்ட்து வருகிறது. இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

Nirmala seetharaman
Nirmala seetharaman

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com