நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ! பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்!

நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ! பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்!

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நிர்மலா சீதாராமன் 2023 ஆண்டிற்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

63 வயதாகும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என தற்போது தகவல்கள் வந்திருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு எரிச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில், தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com