2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

Budget 2024
Budget 2024
Published on

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகளை தற்போது பார்ப்போம்:

  • வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

  • நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.

  • கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

  • ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.

  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

  • அங்கன்வாடி மற்றும் ஆஷா மருத்துவ பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  • அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

  • பால் உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற நடவடிக்கை.

  • பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.

  • நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

  • தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.

  • தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.

  • நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.

  • 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் புதிதாக அமைக்கப்படும்.

  • 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி வரும் ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.

  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்க முடிவு

  • புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை

  • தீவுப் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க திட்டம்

  • எண்ணெய் வித்துக்களுக்கான சுயசார்பு இயக்கம் அமலாக்கப்படும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com