மும்பை தானேயில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினாலோ, எச்சில் துப்பினாலோ 500/- அபராதம் விதிக்கப்படுமென தானே மாநகராட்சி அறிவித்துள்ளது.
தானே நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள, தானே மாநகராட்சி பல வகைப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இப்படி இருந்தும் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்கின்றனர்.
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயம்…
சாலைகளில் குப்பையை கொட்டுபவர்களுக்கு அபராதத்தொகை 180/-லிருந்து 500/-
பொது வெளியில் எச்சில் துப்புபவர்களுக்கு 150/-லிருந்து 500/- அபராதத் தொகை.
பொது வெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதத் தொகை 500/- லிருந்து 1000/-
தவிர, பொதுவெளிகளில் செல்லப்பிராணிகளினால் ஏற்படுத்தப்படும் அசுத்தத்திற்கு அதன் உரிமையாளர் களுக்கு தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் அபராதத் தொகையான 100/- லிருந்து 1000/- ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள குப்பைகள் வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு அறிவியல் தொழில் நுட்பம் மூலம் திடக்கழிவு மேலாண்மையால் தரம் பிரிக்கப்படுகிறது.
தானே மாநகராட்சி மட்டுமே தனித்து முயற்சி செய்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பும் வேண்டுமென நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தானேயைச் சேர்ந்த பலரும், அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது நகரின் சுத்தத்திற்காக என்பதால் வரவேற்கத்தக்கதெனக் கூறுகின்றனர்.