காத்திருந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா விமான நிலைய தீ விபத்து!

காத்திருந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா விமான நிலைய தீ விபத்து!

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பயணிகளிடையே சற்று பரபரப்பு நிலவியது.

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று இரவு 9.12 மணியளவில் உள்ள சோதனைப் பகுதியில் சிறிய அளவினில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புகையின் காரணமாக சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது. தீயின் அளவு நிலைமை கட்டுக்குள் வந்த பிறகே சிறிது தாமதமாக விமானங்கள் புறப்பட்டுச் சென்றது.

கொல்கத்தா விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் அச்சத்துடன் வெளியேறினர்.உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புகை வெளியேறியதால் உள்ளிருந்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டு உடனே பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து காரணமாக விமான சேவையில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரவு 9.40 மணியளவில் தீ அணைக்கப்பட்ட பிறகு சோதனைப் பகுதியில் சேவை மீண்டும் தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com