கோடையில் ஏற்படும் தீ விபத்துகள். மீட்புப் பணிக்கு தயாராக நிற்கும் தீயணைப்பு வீரர்கள்.

கோடையில் ஏற்படும் தீ விபத்துகள். மீட்புப் பணிக்கு தயாராக நிற்கும்  தீயணைப்பு வீரர்கள்.

குளிர்காலம் போய் கோடைக்காலம் துவங்குகிறது. கோடையின் பாதிப்புகளை எதிர்கொள்ள நாம் தயாராகி வருகிறோம். அதே சமயம், கோடையில் எதிர்பாராமல் நிகழும்  தீ விபத்து அபாயங்களைத் தவிர்க்க மீட்பு பணிக்கு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கோடையில் வெப்பத்தின் தாக்கத்தால் தீப்பற்றும் சம்பவங்கள் திடீரென நடக்கும் வாய்ப்புகள் அதிகம் . சமீபத்தில் சேலம் ஏற்காடு, குண்டூர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று தீயை அணைத் தனர்.இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த சேலம் மாவட்டம் முழுவதும் 14 தீயணைப்பு நிலையங்களிலும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .மீட்பு பணிக்குத்  தேவையான கான்கிரீட் கட்டர், ஸ்டீல் கட்டர்  மற்றும் ஸ்பிரிட்டர் ஹைட்ராலிக் ஜாக்கி ,60 டன் அளவிற்கு எடையை தூக்கும் திறன் கொண்ட ஏர் லிப்டிங் பேக், லைபாய், லைஃப் ஜாக்கெட் ஆகியவற்றை உரிய பராமரிப்புடன் உபயோகிக்கத் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ஏற்காடு, மஞ்சவாடி, கணவாய், கருமந்துறை, மேட்டூர், ஜருகுமலை உள்ளிட்ட பல பகுதிகள் அபாய வளையத் திற்குள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப் படுகிறது. இந்த பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது;

 “கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் தொழிற் சாலைகள், பழைய இரும்பு கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் குடோன்கள், பஞ்சு மில்கள், நூல் மில்கள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த காலங்களில் தீ  விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல் வனப்பகுதிகளில் காய்ந்து கிடக்கும் செடி, கொடிகள், மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள் போன்றவைகள் கொட்டி இருக்கிறது .இவற்றின் மீது லேசாக தீப்பொறி பட்டால் கூட எளிதில் தீ பற்றிக் கொள்ளும். அதனால் விலை உயர்ந்த மரங்கள், மதிப்பு மிகுந்த மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகிவிடும். மேலும் வனப்பகுதியில் சாலையோரம் தீ விபத்து ஏற்பட்டால் எளிதில் தீயை அணைத்து விடலாம். ஆனால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை எளிதில் அணைக்க முடியாது, இதைக் கருத்தில் கொண்டு விபத்து ஏற்பட்டால் அவசரகால மீட்பு பணிக்காக சேலம் மாவட்டம் முழுவதும் 700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தீயில் சிக்கியவர்களை மீட்க நன்கு பயிற்சிப் பெற்ற கமாண்டோ வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் கருவிகளும் முழு வீச்சில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் செல்ல ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

 தீ விபத்து எங்கு நிகழ்ந்தாலும் நமக்கென்ன என்று வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தந்தால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com