தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! வடகிழக்கு பருவமழை !

தீயணைப்புத்துறையினர்
தீயணைப்புத்துறையினர்
Published on

வடகிழக்கு பருவமழை வந்த முதல் நாளே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது என்றே சொல்லலாம். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு முதல் நாளிலேயே இவ்வளவு மழை பெய்தது உண்மையில் அனைவருக்குமே ஆச்சரியம் தான். தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் எஸ். தனபால் .

சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்புத் துறையை மட்டுமின்றி மூன்று சிறப்பு கமாண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 50 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

தீயணைப்புத்துறையினர்
தீயணைப்புத்துறையினர்

ஒரு தீயணைப்பு அலுவலகத்திற்கு இரண்டு ரப்பர் படகு தயார் நிலையில் உள்ளது.

சாலையில் சாய்ந்து இருக்கும் மரங்களை அகற்றுவதற்காக மின்சார இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதா? மரங்கள் ஏதேனும் சாய்ந்துள்ளதா? என தீயணைப்புத் துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வடகிழக்கு பருவமழையால் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் வீட்டிற்கும் செல்லாமல் பணியில் ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் எஸ். தனபால் தெரிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com