

டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் யலமஞ்சலி அருகே டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12.45 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலின் இரண்டு பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது. உடனே இது குறித்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் பயணி ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் சந்திரசேகர் சுந்தரம் என்ற பயணி உயிரிழந்தார்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் ரயில் தீப்பிடித்த போது பாதிக்கப்பட்ட பெட்டியில் 82 பயணிகளும் மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் பயணித்து வந்ததாகக் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெட்டியிலிருந்து ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, மற்ற பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு மாற்று ரயிலில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இதனிடையே தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை கண்டறிய இரண்டு தடவவியல் குழுக்கள் பணியாற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த எக்ஸ்பிரஸ் மேற்குவங்க மாநிலம் டாடா நகரிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இந்த தீ விபத்து பயணிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நிகழாமல் இருக்க ரயில்வே நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மற்றும் மாற்று ரயிலில் பயணம் செய்பவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
உதவி எண்கள் (Helpline Numbers)
விஜயவாடா (Vijayawada): 0866-2575167
ராஜமுந்திரி (Rajahmundry): 088-32420541, 088-32420543
சம்கோட் (Samalkot): 7382629990
Elamanchili: 7815909386
Anakapalle: 7569305669