தல தோனியின் "எல்ஜிஎம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

தல தோனியின் "எல்ஜிஎம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவில் தோனியின் மனைவி கலந்து கொண்டு, கிளாப் அடித்து, படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருமானவர் எம்.எஸ்.தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாது ஓட்டல், உடற்பயிற்சிக்கூடம், இயற்கை விவசாயம், சென்னையின் எஃப் சி கால்பந்து அணியின் உரிமை என பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனி 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் நேரடி தமிழ் படம் ஒன்றை தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் தான் ‘எல்.ஜி.எம்’

‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் எல்.ஜி.எம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு 7 மணிக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com