அமெரிக்காவில் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை மீட்பதற்காக அமெரிக்காவில் உள்ள 11 பெரிய வங்கிகள் ஆதரவு அளித்துள்ளன
அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் திவாலாகலாம் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கியும் (First Republic Bank) திவாலாகி, மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ப்ளூபெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் பங்குகளின் விலை 74.25% குறைந்துள்ளது, மேலும் பங்குகள் 61.83% குறைந்துள்ளன. கடந்த வர்த்தக நாட்களின் அதன் ஒரு பங்கின் விலை 19 டாலர் என்ற குறைந்த புள்ளியை எட்டியதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காகவில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் இன்னொரு வங்கியான சிக்னேச்சர் வங்கியும் மூடப்பட்டது.ஒட்டுமொத்த அமெரிக்க முதலீட்டு சந்தையையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
சர்வதேச வங்கி கட்டமைப்பை ஆட்டிவைத்துள்ள சிலிக்கான் வேலி வங்கியின் திவால் சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது மட்டும் அல்லாமல் ஆசிய, ஐரோப்பிய, பிரிட்டன் வங்கி துறையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதற்கு கிரெடிட் சூயிஸ்-ன் பணபுழக்க பிரச்சனை ஒரு முக்கிய உதாரணம்.
தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை மீட்பதற்காக அமெரிக்காவில் உள்ள 11 பெரிய வங்கிகள் 30 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமையன்று S&P குளோபல் ரேட்டிங்ஸ் மற்றும் ஃபிட்ச் நிறுவனங்கள் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் கடன் மதிப்பீடுகளில் மோசமான நிலையில் உள்ளதாக அதாவது நெகட்டிவ் ரேட்டிங் என்று அழைக்கப்படும் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது . வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் சொத்துகளுக்கும், கடன்களுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டு திவாலாகியுள்ளது.
இதையடுத்து, சிலிகான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடிவிட்டது. மேலும், டெபாசிட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்கான நடவடிக்கைகளை ஜோ- பிடன் அரசு தொடங்கியுள்ளது.