விண்வெளிக்குச் செல்லும் முதல் சவுதி அரேபியா வீராங்கனை!

விண்வெளிக்குச் செல்லும் முதல் சவுதி அரேபியா வீராங்கனை!
Published on

வுதி அரேபியா முதன் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. ரயானா பர்ணாவி என்ற வீராங்கனை, இந்த ஆண்டு விண்வெளிக்குச் செல்ல விருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

AX-2 விண்வெளிப் பயணம் என்ற திட்டத்தின் கீழ் சவுதி அரேபியா தனது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புகிறது. இதன்படி, 2023ஆம் ஆண்டின் மத்தியில் மேற்கொள்ள இருக்கும் விண்வெளிப் பயணத்தில் ரயானா பர்ணாவி என்ற விண்வெளி வீராங்கனையும் இடம்பெற இருக்கிறார். இவருடன் சவுதியின் விண்வெளி வீரர் அலி அல் கர்னியும் விண்வெளிக்குச் செல்கிறார். இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அந்நாட்டுப் பெண்களுக்கு பல அடிப்படை உரிமைகளை மறுத்து வந்த சவுதி அரேபியாவில் படிப்படியாக பல்வேறு வகையில் தளர்வுகளை அறிவித்து, தற்போது முன்னேற்றத்தக்க வகையில் பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பப்படவிருக்கிறது.

சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகம் 2019ஆம் ஆண்டு தனது விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது. அதன் மூலம் அரபு நாடுகளில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றுள்ளது.

முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 41 வயதான விண்வெளி வீரர் நெயாடி சுல்தான் ஆஃப் ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் இவர், இந்த மாதம் இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக மீண்டும் விண்வெளிக்குச் செல்கிறார். இவரது வெற்றிப் பயணத்தை முடித்த பின்னர், ஆறு மாத காலத்தை விண்வெளியில் கழித்த முதல் அரபு நாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

இந்நிலையில், அமீரகத்தைத் தொடர்ந்து சவுதியும் விண்வெளிக்கு தனது வீரர், வீராங்கனையை அனுப்ப இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com