இரும்புத் தூண்களைப் பயன்படுத்தி முதல்முறையாக மேம்பாலப் பணிகள்: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி!

இரும்புத் தூண்களைப் பயன்படுத்தி முதல்முறையாக மேம்பாலப் பணிகள்: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி!

திகப்படியான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை அமைக்க சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தப் பாலத்தை, ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தின் சாய் தளத்தை தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. அதன்படி, தற்போது உஸ்மான் சாலையில் இருக்கும் 747 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்தின் சாய்தளத்தைத் தகர்த்து புதிதாக அமைய இருக்கும் மேம்பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து இருக்கிறது.

இதன்படி, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் 1வது மெயின் ரோடு மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய மூன்று சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய மேம்பாலம் 1,200 மீட்டர் நீளத்தில், 8.40 மீட்டர் அகலத்தில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய மேம்பாலக் கட்டுமானப் பணிகளில் ஒரு புதிய முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, வழக்கமாக கான்கிரீட் தூண்களைக் கொண்டே மேம்பாலத் தூண்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மேம்பாலக் கட்டுமானத்தில் இரும்புத் தூண்கள் கொண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டுதான் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் முதல் முறையாக பாலங்களுக்கான தூண்களை இரும்பு கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி பாலம் அமைக்கும்போது தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. தூண் மற்றும் பாலத்தை தங்கிப் பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்பட உள்ளது. இந்தத் தூண் போன்ற வடிவமைப்பு சேலம் இரும்பு ஆலையில் செய்யப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு முடிந்தவுடன் உடனே பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி தொடங்கும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மார்த்தாண்டத்தில் இதுபோன்ற பாலத்தை அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் இதுபோன்ற பாலங்கள் சென்னையில்தான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது" என்று கூறி உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com