சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி!

சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி!

மயமலையில் உள்ள சியாச்சின் பனி மலைப்பகுதியில் முதல்முறையாக சிவா சௌஹான் என்ற பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 உலகின் மிக உயரமான போர் முனையாக சியாச்சின் பனி மலைப்பகுதி உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு உத்திசார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இந்நிலையில், சியாச்சின் போர் முனையில் முதல் முறையாக கேப்டன் சிவா சௌஹான் என்ற பெண் ராணுவ அதிகாரி திங்கள் கிழமை பணியமர்த்தப்பட்டார். போர்முனையில் பணியமர்த்தப்படும் முன் பனிச்சுவர் மீது ஏறுவது, பனிச்சரிவிலும் பனிப்பாறைக்கு இடையிலும் சிக்கியவர்களை மீட்பது, உயிர் பிழைத்திருக்கும் பயிற்சிகள் என ஒரு மாத காலம் கடுமையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். அதன் பிறகே அவர்  அங்கு பணியமர்த்தப்பட்டார்.

போர்முனையில் சாலை கட்டு மானம், பதுங்குமிடம் அமைத்தல் என ராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கு உதவும் எண்ணற்ற பணிகளில், அவர் தலைமையிலான குழு 3 மாதங்கள் சியாச்சினில் ஈடுபடுத்தப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த சிவா சௌஹான் சிவில் பொறியியல் பட்டதாரி ஆவார். கேப்டன் சிவா சௌகான் 15,632 அடி உயரத்தில் பனிமலையான இமயமலையில் காவல் பணி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com