FIS அறிக்கை: 2026 க்குள் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனையின் மதிப்பு 88 சதவீதம் உயரும்!

FIS அறிக்கை: 2026 க்குள் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனையின் மதிப்பு 88 சதவீதம் உயரும்!
Published on

இணைய வர்த்தகத்தின் செயல்பாடுகள் 2021 முதல் 2022 வரை 53 சதவீதம் அதிகரித்து, 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும், POS மதிப்பில் டிஜிட்டல் வாலட்டுகள் பயன்பாடு 5 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் Global Financial Technology-ன் முன்னோடியான FIS தெரிவித்துள்ளது.

இதன் அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டு உலகளாவிய நாற்பது சந்தைகளில், கன்ஸ்யூமர்கள் எப்படி பணத்தை செலுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்தது. இதில் 2022 ல் மட்டும் 70% Real Time Payment முறையில் 525 பில்லியன் டாலர்கள் உலக அளவில் இணைய வர்த்தகம் மூலமாக கிடைத்துள்ளதாகவும், இதுவே 2021ல் 463 பில்லியன் டாலர்களாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவில், UPI பணப் பரிவர்த்தனையில் சராசரி மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. என்னதான் கையில் பணம் இருந்தாலும் பெரும்பாலான நேரடி பரிவர்த்தனைகள் கூட UPI முறையில் நடைபெறுகின்றன. இது 2026க்குள் நேரடி பணப் பரிவர்த்தனை அளவு 34 சதவீதம் குறைந்து, டிஜிட்டல் வாலட்டுகள் மூலமாக செலுத்தப்படும் பணப் பரிவர்த்தனையின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும் இணைய வர்த்தகத்தின் வளர்ச்சியும் 2026க்குள் 88 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2020ல் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022-குள் UPI வழியிலான பண பரிவர்த்தனையின் அளவு 427 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதில் 2021 முதல் 2022 வரை மட்டுமே 53 சதவீதம் அதிகரித்து, 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து, இந்தியாவிலேயே முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளமாக UPI மாறியுள்ளது. 2019ல் Google Pay, Paytm PhonePe போன்ற டிஜிட்டல் வாலட்டுகளின் POS சந்தை மதிப்பு 5 சதவீதத்திலிருந்து, 2022 ஆம் ஆண்டில் 35 சதவீதமாக வளர்ந்துள்ளது. இது UPI பணப்பரிவர்த்தனையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதைக் காட்டுகிறது.

ஜனவரி 2023 நிலவரப்படி இந்தியாவில் UPI முறையில் இயங்கும் வங்கிகளின் எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் பன்மடங்கு உயரலாம்.

2019 ஆம் ஆண்டில் 71% ஆக இருந்த நேரடி பணப் பயன்பாடு, 2022-ல் வெறும் 27 % ஆக குறைந்துள்ளது. எனவே மக்கள் நேரடியாக பணத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் முறையிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய விரும்புகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com