மீனவர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்! கர்நாடக வனத் துறையினர் விளக்கம்!

மீனவர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்!  கர்நாடக வனத் துறையினர் விளக்கம்!
Published on

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக செய்திகள் பரவியது.

சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக – கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள மீன் பிடிப்பதற்காக சென்றனர். கடந்த 14-ஆம் தேதி இரவு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கர்நாடக வனத் துறையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ராஜா என்ற மீனவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு மீனவர் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என கர்நாடக வனத்துறை அதிகாரி அங்குராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது.

மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் சொல்கிறார்கள்

வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர். அங்கிருந்த மூன்று பேரை சரணடையுமாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததாகவும், அப்போது அவர்கள் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பதிலுக்கு கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அப்போது அவர்கள் துப்பாக்கிகளை அங்கேயே போட்டுவிட்டு ஆற்றில் குதித்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரவி மற்றும் இளையபெருமாள் கரையேறினர். ஆனால், ராஜா மட்டும் கரை சேரவில்லை. இந்த நிலையில் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு அடிபட்ட ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் கிடந்தது.

இந்நிலையில் கர்நாடக வனத்துறை அதிகாரி அங்குராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “இரவு நேரத்தில் அத்துமீறி 2 படகில் 6 பேர் உள்ளே நுழைந்ததால் டார்ச் லைட் மூலமாக எச்சரிக்கை விடுத்தும் செல்லவில்லை. பதிலுக்கு மான் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி மூலம் எங்களை நோக்கி சூட்டனர். பதிலுக்கு நாங்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினோம். பயத்தில் ஆற்றில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்று விளக்கமளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com