வலையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளால் மீனவர்கள் அதிர்ச்சி!

வலையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளால் மீனவர்கள் அதிர்ச்சி!
Published on

ந்தியாவில் சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் கணக்கில் காட்டாத கருப்புப் பணமாக வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்வதென புரியாமல் விழித்தனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளம் வேம்பனூர் குளத்தில் மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மீனவர்களின் வலையில் மீன்களோடு சேர்த்து 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கியது. இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இப்படி, இருபது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுகள் மீனவர்கள் வலையில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகளின் மேல், ‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்கட்டுகள் குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் போல் இருந்தாலும், அசல் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் போலவே வங்கி நூல் கட்டும் போடப்பட்டு இருக்கின்றன.

இந்தத் தகவல் பரபரப்பாகப் பரவியதைத் தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் அந்தப் பகுதியில் சினிமா சூட்டிங் ஒன்று நடந்தது தெரிய வந்து இருக்கிறது. சினிமா படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழுவினர் அந்தப் பணக்கட்டுகளை குளத்தில் வீசி விட்டுச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com