சென்னை தீர்த்தவாரி உத்ஸவத்தில் குளத்தில் மூழ்கி ஐந்து அர்ச்சகர்கள் பலி!

சென்னை தீர்த்தவாரி உத்ஸவத்தில்  குளத்தில் மூழ்கி ஐந்து அர்ச்சகர்கள் பலி!

சென்னை, நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ளது அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது. அதற்காக சுவாமியை பல்லக்கில் வைத்து சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர்கள் சுமந்து வந்தனர். கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி உத்ஸவத்தின்போது சுவாமியை  குளத்தில் இறக்கி நீராட்டுகையில், அந்தக் கோயிலைச் சேர்ந்த இருபத்து ஐந்து அர்ச்சகர்களுக்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக அர்ச்சகர் ஒருவர் கால் நழுவி குளத்தில் விழுந்துள்ளார். அதைக் கண்ட மற்றோரு அர்ச்சகர் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்து இருக்கிறார். அவரும் குளத்தில் நழுவி மூழ்கிவிட, அவரைக் காப்பாற்ற என அடுத்தடுத்து அர்ச்சகர்கள் குளத்து நீரில் மூழ்கி உள்ளனர். நீரில் மூழ்கியவர்கள் யாரும் மேலே வராததால், அச்சப்பட்ட அங்கிருந்தோர் வேளச்சேரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியதில் ஐந்து பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களது உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரும் கோயில் அர்ச்சகர்கள் எனத் தெரிய வந்துள்ளது. சூர்யா (24), ராகவ் (22), ராகவன் (18), யோகேஸ்வரன் (23), வணேஷ் (20) ஆகிய ஐந்து பேரும் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த அர்ச்சகர்கள் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கோயில் குளத்தில் மூழ்கி அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com