இன்று கார்த்திகை பௌர்ணமி ! திருவண்ணாமலையில் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணி!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அருகிலுள்ள கிரிவல பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.இன்று காலை 8:35 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி நாளை 9 : 33 மணி வரை உள்ளதால் இன்று இரண்டாவது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதனால் லட்ச கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

நேற்று மகா தீபத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு பஞ்சலோகத்தால் ஆன 5 3/4 அடி உயரமும் 300 கிலோ எடையும் கூடிய மகா தீப கொப்பரையில் 4500 லிட்டர் நெய் நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக பயன்படுத்தி பர்வத ராஜகுல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.

இன்று கார்த்திகை பௌர்ணமி மிக முக்கியமான நாள் என்பதால் இன்று கிரிவலம் செல்வது விசேஷமானது என்பது ஐதீகம். திருவண்ணாமலை கிரிவல பாதையில் 2-வது நாளாக மக்கள் கிரிவலம் செல்வதால் .பக்தர்களின் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக இன்றும் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக இன்று கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று மகா தீபத் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் இரவு முழுக்க கிரிவலம் மேற்கொண்ட அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பௌர்ணமி என்பதால் பலரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com