புளூரோனாவா ? அதன் தாக்கம் என்ன?

புளூரோனாவா ? அதன் தாக்கம் என்ன?
Published on

கொரோனா மற்றும் புளூ ஒருசேர ஒருவரைத் தாக்கினால் அதை புளூரோனா என அழைப்பர். இத்துறையின் நிபுணர் சீமா யாஸ்மின் இவ்விரண்டு நோய்களில் ஒன்றின் தாக்கம் இருக்கும்போது, அது மற்றொன்றின் தாக்கத்திற்கு எளிதில் வழிவகுக்கும் என்கிறார். சீனாவின் வூகானில் கொரோனா பாதிப்பின்போது 2020ம் ஆண்டில் 12 சதவீதம் பேருக்கு புளூ நோயும் இணைந்தே தாக்கியது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா மட்டும் தாக்கிய நிலையில் வைரஸ் 12 நாட்களும், கொரோனா+புளூ இணைந்து தாக்கிய நிலையில் வைரஸ் 17 நாட்களுக்கும் வெளியாவது ஆய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வைரஸ்களும் ஒருசேரத் தாக்கினால் ஏற்படும் ஆபத்துகள்:

திடீரென சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது.

இருதய பாதிப்பு ஏற்படுவது.

வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாக்டீரியா துணைத்தாக்கம் ஏற்படலாம்.

நுரையீரல்களின் பல பகுதிகளில் தாக்கம் ஏற்படுவது.

இதனால் நுரையீரல் செயலிழப்பு ஏற்படுவது.

நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரலைச் சுற்றி நீர்கோத்தல் (Pleural effusion) ஏற்படுவது.

மூளை, தசைப் பகுதியில் அழற்சி (Inflammation)

தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகம் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படுவது.

ஓரு இடத்தில் சீழ்பிடித்து அது ரத்தத்தில் கலந்து உடல் முழுக்க பாதிப்பு (Sepsis)ஏற்படுவது.

ஆகிய அறிகுறிகள் நோய் தனித்து ஏற்படுவதைவிட இரு வைரஸ் ஒருசேர தாக்கும்போது கடுமையாக இருக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

தனியாக தாக்கும்போது Ct மதிப்பு சராசரியாக 36 எனவும், ஒருசேரத் தாக்கும்போது Ct மதிப்பு சராசரியாக 32 எனவும் உள்ளது. Ct மதிப்பு குறைவாக இருந்தால் நோய் பாதிப்பு அதிகம் என்றும், Ct மதிப்பு அதிகம் என்றால் பாதிப்பு குறைவு எனவும் பொருள் கொள்ள வேண்டும்.

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்பு மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகமும், புளூ தாக்க காலத்தில்குறிப்பாக பனிக்காலத்தில் இரண்டு நோய்களுக்கான பரிசோதனைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக சுற்றறிக்கை அனுப்பியதை தமிழக அரசு கவனத்தில்கொண்டதா என தெரியவில்லை. தற்போது இரு வைரஸ் தாக்கிய ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உடனடியாக அரசு இதுபோன்ற இரு வைரஸ் தாக்குதல்களை கண்டறியவும், தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com