அதிரடி மாற்றம்! இனி வருமான வரி கணக்கு எளிது! குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர்!

இந்த புதிய சட்டம் இந்தியாவின் பல தசாப்தங்கள் பழமையான வரி கட்டமைப்பை எளிமையாக்கும், சட்டபூர்வமான குழப்பங்களைக் குறைக்கும்.
FM Sitharaman tables revised Income Tax Bill
நிர்மலா சீதாராமன் DD NEWS
Published on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலாவதியான 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரி மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

“இதில் வரைவு முறையில் திருத்தங்கள், சொற்றொடர்களின் பொருத்தம், அதனால் ஏற்படும் தொடர்புடைய மாற்றங்கள் உள்ளன” என்று அவர் கூறினார். மேலும், குழப்பத்தை தவிர்க்கும் விதமாக முந்தைய மசோதா திரும்ப பெறப்பட்டதாகவும் அவர் சேர்த்து கூறினார்.

நிதியமைச்சர் கூறுகையில், திருத்தப்பட்ட மசோதா நியாயத்தையும் தெளிவையும் அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள விதிகளுடன் சட்டத்தை சரியாக பொருத்தும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதன் மூலம், சட்டமியற்றுபவர்கள் அனைத்து பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரே, புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, பிப்ரவரி 13 அன்று மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா, 2025-ஐ கடந்த வாரம் அரசு முறையாகத் திரும்பப் பெற்றது.

பாண்டா கருத்துப்படி, இந்த புதிய சட்டம் இந்தியாவின் பல தசாப்தங்கள் பழமையான வரி கட்டமைப்பை எளிமையாக்கும், சட்டபூர்வமான குழப்பங்களைக் குறைக்கும்.

மேலும் தனிநபர் வரி செலுத்துவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்க உதவும்.

1961-இல் இயற்றப்பட்ட தற்போதைய வருமான வரிச் சட்டம் 4,000-க்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கண்டுள்ளது. 

அதில் தற்போது ஐந்து லட்சம் வார்த்தைகளுக்கும் அதிகமாக இருப்பதால் அது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. புதிய மசோதா இந்தச் சட்டத்தை கிட்டத்தட்ட 50 சதவீதம் எளிமையாக்குகிறது.

இது சாதாரண வரி செலுத்துவோர் படிக்கவும் புரிந்துகொள்ளவும் மிகவும் எளிதாக இருக்கும் என்று பாண்டா குறிப்பிட்டார். 

பல வரைவுப் பிழைகள் மற்றும் தெளிவற்ற தன்மையைக் குறைக்கக் குழு பல திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தது.

திருத்தப்பட்ட மசோதாவில், அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் வரி அடுக்குகளும் (slabs) விகிதங்களும் சரிசெய்யப்பட்டுள்ளன. 

இந்த புதிய அமைப்பு நடுத்தர வகுப்பினரின் வரிகளைக் கணிசமாகக் குறைக்கும், அவர்களின் கைகளில் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரித்து, நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் என்று அரசு கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com