மேயர்களை தொடர்ந்து கவுன்சிலர்களுக்கும் கடிவாளம் - முதல்வர் எச்சரிக்கை!

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து டவுன் பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை முக்கியமானவை ஆகும். இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வார்டு மெம்பராகவும் கவுன்சிலராகவும் தங்கள் பகுதிக்கு வேண்டிய நல்ல பணிகளை செய்வது மட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் பவருக்கு தேவையான வசதிகளை கேட்டுப் பெறுவதும் அடங்கும். ஆனால் பெரும்பாலான தேர்தல்களில் வைட்டமின் ப புகுந்து விளையாடுவதால் பணம் உள்ளவர்கள் கவுன்சிலர்களாக ஜெயிப்பதும் அதை வைத்து மேலும் மேலும் சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து வருகின்றனர்.

நம் மக்களுக்கும் அவர்களிடமிருந்து ஓட்டுக்கு பெற்ற பணம் காரணமாக தங்களுக்கு சேர வேண்டிய நியாயமான கோரிக்கைகளை கூட கேட்பதற்கு கூச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதனாலேயே மாநகராட்சி நகராட்சிகளில் பெரும்பாலான கவுன்சிலர்கள் தாங்கள் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கோவை, திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகளில் நேயர்களின் செயல்பாடு சரி இல்லை என்பதாக கூறி அவர்களை பதவி நீக்கம் செய்ய வைத்து புதிய மேயர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இது கவுன்சிலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மேயர் அடாவடி செய்தால் அவர்களின் பதவியே பறிக்கப்படும் சூழலில், கவுன்சிலர்களில் பதவியை பறிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல என்பதை மிகவும் தாமதமாக கவுன்சிலர்கள் பலர் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் உள்ளாட்சி அமைப்புகளில் சரிவர பணி செய்யாத கவுன்சிலர்களின் பதவிகளையும் பறிக்கலாம் என்பதாக ஒரு ஆலோசனை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வந்த நிலையில், கவுன்சிலர்கள் மிகவும் ஆட்டம் கண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சூடானில் காலராவால் 300 பேர் பலி!
M.K.Stalin

முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கவுன்சிலர் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சரிவர பணி செய்யாத கவுன்சிலர் குறித்த தகவல்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள உள்ளாட்சி அமைப்பு காலங்களில் கவுன்சிலர், மேயர் உட்பட மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com