கால்பந்து ஜாம்பவான் பீலேயின் உடல்நிலை முன்னேற்றம்!

கால்பந்து ஜாம்பவான் பீலே
கால்பந்து ஜாம்பவான் பீலே

பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது 82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதன்பின்னர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென பீலேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால, அங்குள்ள ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பீலேவுக்கு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

‘கால்பந்து உலகின் கடவுள்’ என்று அவரது தீவிர ரசிகர்களால் போற்றப்படும் பீலே, 17 வயதில் உலகக்கோப்பையை வென்றவர் மற்றும் இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். மேலும் கத்தாரில் இப்போது உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த காலங்களில் மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பீலேவின் சாதனை போற்றப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com