மாணவி ப்ரியா பெயரில் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி ! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உதவித்தொகை !
பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

"இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் சென்னை அளவில் ஒருமிகப் பெரிய கால்பந்தாட்ட போட்டியை நடத்தப் போகிறோம்" என்று பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்துள்ளார்

வியாசர்பாடி பகுதியில் உள்ள உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு சென்றபாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்ஆகியோர் பிரியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது "சகோதரி பிரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஓர் இழப்பு. ஒரு பெரும் கனவை சுமந்துகொண்டு கால்பந்தாட்டவீராங்கனையாக இருந்த பிரியா, தவறான ஒரு சிகிச்சை கொடுத்ததன் காரணமாக காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதனால் தனது உயிரையும் இழந்துள்ளார் ப்ரியா.

Priya
Priya

சில விஷயங்களை பிரியாவின் பெற்றோர் சம்மதத்துடன் பாஜக செய்யப்போகிறது. தனது மகள் பிரியாவுக்கு பாரதப் பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்ற பெரியஆசை இருந்ததாகவும், நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக பின்னர், பிரதமரிடம் அழைத்து செல்ல வேண்டும், என்னுடைய பதக்கங்களைக் காட்டிஅவருடைய ஆசியை வாங்க வேண்டும் என்று கூறியதாக, பிரியாவின் தந்தை என்னிடம் கூறினார். மேலும், ஒரு தந்தையாக அதை நிறைவேற்ற முடியவில்லையேஎன்ற வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் 5 நாட்களில் இரண்டு விஷயங்களை செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னையில், தமிழகத்தில்நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மழைக் காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில், சென்னை அளவில் ஒரு மிகப்பெரிய கால்பந்தாட்டபோட்டியை நடத்தப்போகிறோம். இந்த விழாவிற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை அழைத்து வந்து இங்குள்ள கால்பந்தாட்ட வீராங்கனைகள் சிறப்பிக்க உள்ளோம்.

இதை தவிர 10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உதவித் தொகை வழங்கிஅவர்கள் விரும்பும் கால்பந்தாட்ட அகாடமியில் சேர்க்கப்படுவர். அதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக்கொள்ளும். ஒரு பிரியா இறந்துவிட்டார், ஆண்டுதோறும் 10 பிரியாக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆக்கபூர்வமான நிகழ்வை கையில் எடுக்கிறோம். பிரியாவின் பெயரில் ஒரு கால்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டிலிருந்து சென்னையில் நடத்தப் போவதாக பிரியாவின் பெற்றோரிடம் உறுதிமொழி அளித்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com