
குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான், சர்ச்சைக்குரிய வகையில், "நான் இந்தியாவை 'எக்ஸ்இந்தியா'வாகப் பிரிக்க அழைக்கிறேன்.
@நரேந்திர மோடி ரஷ்யாவின் ஆள். @காலிஸ்தான்நெட்-டுக்கு சுதந்திரம் விரும்பும் நண்பர்கள் தேவை" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் உடனடி நடவடிக்கை:
இந்தியாவுக்கு எதிரான இவரது வெறுப்புப் பிரச்சாரத்தை உடனடியாகக் கவனித்த மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை, இந்த விவகாரத்தை எக்ஸ் நிறுவனத்திடம் சுட்டிக்காட்டி, இந்தியப் பயனர்களுக்கு இவரது கணக்கை முடக்குமாறு உத்தரவிட்டன. அதன்படி, குந்தரின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான்?
குந்தர் ஒரு ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர், சமூக ஊடகப் பிரபலமும் அரசியல் ஆர்வலருமாவார்.
இவர், உக்ரைன், கொசோவோ, போஸ்னியா மற்றும் ஆஸ்திரியாவுக்கான நேட்டோ உறுப்பினர் குழுவின் தலைவராகவும், தெற்கு பால்கன் நாடுகளின் பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான நடவடிக்கைக் குழுவின் வாரியத்திலும் உள்ளார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு தருவது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம் ஆகியவற்றிற்காக இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ரஷ்யா, சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராக இவர் ஒரு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இந்தப் பதிவுகளின் மூலம், 'மேற்கத்திய' நாடுகளின் எதிரிகள் என்று அவர் கருதுபவர்களைப் பிரிக்க வேண்டும் என்று இவர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.
பழைய உளரல்கள் :
கடந்த 2023-ல் இவர் வெளியிட்ட ஒரு பதிவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவாளர் என்று விமர்சித்து, ராகுல் காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக ஆதரிப்பதாகக் கூறியிருந்தார்.
அவரது சர்ச்சைக்குரிய இந்திய வரைபடத்தில், இந்தியப் பகுதிகள் பெரும்பாலானவை பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் காலிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டிருந்தன. இந்தப் படம் இணையவாசிகளிடையே கடுமையான கோபத்தையும் கண்டனங்களையும் பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை ஆஸ்திரிய தூதரகத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்தச் சம்பவம், டிஜிட்டல் உலகில் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளின் முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான தன்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.