பள்ளிக்கல்வி துறையின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலா! மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள்!

மாணவ - மாணவியர்
மாணவ - மாணவியர்

தமிழகத்தில் பள்ளி கல்வி துறை தற்போது பல்வேறு விதமான திட்டங்களை மாணவ, மாணவியருக்காக செய்து வருகிறது் மாணவர்களின் கலைத் திறன்களைவெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இதில் , ஓவியம், கவிதை, கட்டுரை, மிமிக்கிரிஉள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின்கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும் பள்ளிக் கல்விசெயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களைஒருங்கிணைப்பதே இந்த கலைத் திருவிழாவின் நோக்கமாகும்.

மாணவ - மாணவியர்
மாணவ - மாணவியர்

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்மாணவ , மாணவிகள் பங்கேற்கும் கலைத்திருவிழா நிகழ்வுகள் பள்ளிஅளவிலிருந்து துவங்கி மாநில அளவு வரை 23/11/2022 முதல் 9/1/2023 வரைநடைபெற உள்ளது.

இதில் , 23/11/2022 முதல் 28/11/2022 வரை பள்ளி அளவிலும், 29 முதல் டிசம்பர் 5 வரை வட்டார அளவிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் வெற்றிபெறுபவர்கள் டிசம்பர் 6 முதல் 10 வரை நடக்கும் மாவட்ட அளவிலானபோட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாவட்ட அளவில் வெற்றிபெறுபவர்கள் ஜனவரி மாதம் 3 முதல் 9 வரை நடைப்பெறும் மாநில அளவிலானபோட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை பள்ளிக்கல்வி துறையின்சார்பில் வெளிநாட்டு சுற்றுலாக்கு அழைத்து செல்ல உள்ளனர். எனவே , அனைத்துஅரசு நடுநிலை, உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த கலைஇலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது.

இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை பள்ளிக்கல்வி துறையின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாக்கு அழைத்து செல்ல உள்ளனர். எனவே , அனைத்துஅரசு நடுநிலை, உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த கலைஇலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com